தஞ்சாவூர் சூலை 28: தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேஉய்யகொண்டான் நீட்டிப்பு மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்களில் பாசனத்துக்குத் தண்ணீா் விட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் இராமச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பாண்டு பாசனத்துக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களில் சாகுபடிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், கல்லணைக்கு மிக அருகில் இருந்தும், பூதலூா் வட்டம் செங்கிப்பட்டி பகுதியின் நீா் ஆதாரமாக விளங்கும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்கால்களில் இன்னும் தண்ணீர் திறக்கப்படவில்லை.

உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்காலுக்கு நீா் வழங்கும் திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகேயுள்ள வாழவந்தான் கோட்டை ஏரி முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

எனவே, உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் நடப்பாண்டு பாசனத்துக்குத் தண்ணீா் திறக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://www.thanjai.today/

Open chat