தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மெடிக்கல் கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் டி.எஸ்.பி., தலைமையில் நடந்தது.

தமிழகமெங்கும் கொரோனா தோற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தளர்வுகள் இல்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள், மெடிக்கலில் கிடைக்கக்கூடிய போதை தரும் பொருட்களை வாங்கி உட்கொள்வதால், உயிரிழப்பு வரை செல்கின்றனர்.

இதை தடுக்கும் விதமாக பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., புகழேந்தி கணேஷ் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம், மதுக்கூர், பகுதிகளைச் சேர்ந்த மெடிக்கல் ஷாப் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது..

கூட்டத்திற்கு பிறகு டி.எஸ்.பி. , புகழேந்தி கணேஷ் நிருபர்களிடம் கூறியதாவது; மது மற்றும் போதைக்கு அடிமையான நபர்கள், போதைக்காக பலவகையில் மருத்துவ பொருள்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், சானிடைசர் விற்பனை செய்ய எந்தவித தடையும் இல்லாத நிலையில், அதில் உள்ள மெத்தனால், எத்தனால், ஐசோபுரோப்பைல் ஆல்கஹால் அதிகளவில் இருப்பதால், அதை சிலர் போதைக்காக பயன்படுத்துகின்றனர்.

எனவே சந்தேகம்படும்படியான நபர்கள் அதிகளவில் சானிடைசர் வாங்கும் போது விசாரித்து வழங்க வேண்டும். அதை போல துாக்க மாத்திரைகள், கோடீன் பாஸ்பேட் கலக்கப்படும் இருமல் டானிக்களையும் மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் வாங்கும் நபர்களுக்கு விற்பனை செய்ய கூடாது என மெடிக்கல் உரிமையாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதில் இன்ஸ்பெக்டர் ஜவஹர், ஜெகன்மோகன், வசந்தா, எஸ்ஐக்கள் ரவிசந்திரன். ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்

Open chat