தஞ்சாவூர் அக் 22 தஞ்சாவூர் பணியின் போது உயிர்நீத்த போலீசாருக்கு 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது இதில் தஞ்சை மாவட்ட ஆட்சியர், டிஐஜி, போலீஸ் சூப்பிரண்டு, ஆகியோர் கலந்து கொண்டனர் வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த போலீசார் நினைவைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் இருபத்தி ஒன்றாம் தேதி வீரவணக்கநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது அதன்படி வீரவணக்கம் நாளையொட்டி வீரமரணமடைந்த போலீசாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூணில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.ஐ.ஜி., ரவிக்குமார், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர் பொழுது மூன்று ரவுண்டு என 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க அதைத்தொடர்ந்து வீரமரணமடைந்த போலீசாரின் சாதனைகளை நினைவு கூறியதோடு வீரமரணம் அடைந்த போலீசாரின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது இதில் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா ஆயுதப்படை போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

க.சசிகுமார் நிருபர்
https://www.thanjai.today/

Open chat