‍கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக பேருந்துகள் இயக்கப்படாமல் முடங்கி கிடந்தன, இன்று முதல் முழு வீச்சில் தஞ்சையிலிருந்து பிற மாவட்டங்களுக்கும், தொலை தூர பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது, தஞ்சையிலிருந்து, சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, திருச்செந்தூர் போன்ற நகரங்களுக்கு இயக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது, அய்ந்து மாதங்களுக்கு மேல் ஒட்டுநர்கள் வீட்டிலிருந்து பணிக்கு ‍திரும்புவதால் இரவு நேரங்களில் கவனமுடன் ஒட்ட அரசு அறிவுறுத்தியுள்ளது, அதே நேரத்தில் தனியார் பேருந்துகள் இயக்குவதில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் அவர்களது சங்கத்தின் மூலமாக அறிவித்துள்ளனர்.

Open chat