தஞ்சாவூர் அக் 28 – தஞ்சாவூரில் வேலை வாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியுள்ளார் இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது.
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் இணையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது இதனை பெற வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30. 9 .2021 அன்றைய தேதியில் ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் முறையாக பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தகுதி உடையவர் ஆவார்.
மாற்றுத்திறனாளியை பொருத்தவரை எழுதப் படிக்கத் தெரிந்தவர் முதல் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 30. 9. 2011 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதியுடையவர் ஆவர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் 45 வயதுக்குள்ளும் இதர பிரிவினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு எதுவுமில்லை பயனர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயிலுபவராக இருக்கக் கூடாது.
பொதுப்பிரிவில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூபாய் இரநூறு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 300. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 400. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 600. வழங்கப்படுகிறது அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளின் எழுதப்படிக்கத் தெரிந்த மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 600. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 750. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 1000, வழங்கப்படுகிறது.
ஏற்கனவே மூன்று ஆண்டுகள் உதவி தொகை பெற்றவர்கள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு மருத்துவம் விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில் படிப்புகள் முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியற்றவர்கள் தகுதியுடைய பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை அசல் பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு வந்து விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்று விண்ணப்பித்து பயனடையலாம் என இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அளித்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
க.சசிகுமார் நிருபர்.
https://www.thanjai.today/