தஞ்சை மே 27: தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனாவால் மேலும் 1105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று 1,105 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 1,033 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 151 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6 ஆயிரத்து 677 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 11 பெண்கள் உள்பட 20 பேர் பலியாகினர். மாவட்டத்தில் இதுவரை 479 பேர் பலியாகியுள்ளனர்.
திருவாரூரில் 905 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. 441 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். இதேபோல் நாகையில் 614 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து காவிரி டெல்டாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 18 பெண்கள் உட்பட 41 பேர் பலியாகி உள்ளனர்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.