தஞ்சை சூலை:14, தஞ்சை விளார் சாலையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை விளார் சாலை அண்ணா நகர் 8வது தெரு துரைராஜ் என்பவரது வீட்டு ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் சமத்துவராஜன், புதுபட்டினம் கிராம நிர்வாக அலுவலர் செந்தில் ஆகியோர் துரைராஜ் வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டில் 2 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு குறைந்த ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் துரை ராஜிடம் ரேஷன் அரிசி எங்கிருந்து வந்தது எதற்காக பதுக்கி வைக்கப்பட்டது என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://www.thanjai.today/

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.