தஞ்சாவூர் ஆக: 12 -சுதந்திர போராட்ட தினத்தில் டெல்லி உழவர்கள் போராட்டத்தில் பங்கேற்க செல்லும் உழவர்களை வழியனுப்பு நிகழ்ச்சி தஞ்சாவூர் ரயிலடி நடைபெற்றது.

ஒன்றிய பாசிச பாஜக மோடி அரசு விவசாயிகளுக்கு எதிரான மூன்று புதிய வேளாண் சட்டங்களை அறிவித்ததை திரும்பப் பெற வேண்டும், 2020 புதிய மின்சார சட்ட திருத்தம், சுற்றுச்சூழல் வரைவு திட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா,ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் கடந்த 2020 நம்பர் 26 முதல் டெல்லியில் மோடி அரசின் கடுமையான ஒடுக்குமுறைகளையும் எதிர்கொண்டு ,பனி, மழை,வெயில் இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு தொடர்ந்து எட்டு மாதங்களாக போராடி வருகின்றனர்.

மோடி அரசு உழவர்களின் கோரிக்கையை ஏற்று சட்டங்களை ரத்து செய்யாமல் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக ,போராடி வருகின்ற விவசாயிகளின் மீது தொடர்ந்து அடக்குமுறையை கையாண்டு வருகிறது.

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்கள் வீடு திரும்ப மாட்டோம் என்ற உறுதியுடன் விவசாயிகள் போராடி வருகின்றனர் வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தின போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சிபிஐ சார்பில் டெல்லி செல்கின்ற உழவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி தஞ்சாவூர் ரயிலடி முன்பு மாவட்ட தலைவர் வீர மோகன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து,உத்திராபதி , ஏஐடியூசி மாநில செயலாளர் சி.சந்திரகுமார், கட்சி மாவட்ட பொருளாளர். பாலசுப்பிரமணியன்,மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் கிருஷ்ணன்,ஒன்றிய செயலாளர் சீனி. முருகையன்,மாவட்ட துணை செயலாளர் காசிநாதன்,மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் செல்வகுமார், ஆம்லாபட்டு. சக்திவேல், அரசு போக்குவரத்து சங்க துரை. மதிவாணன், தெரு வியாபார சங்க முத்துக்குமார்,அரசு பணியாளர் சங்க திருநாவுக்கரசு, ம.க.இ.க மாநகர செயலாளர் இராவணன், தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் அருண் ஷோரி, சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர்.

மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பால சுந்தரம் தலைமையில் டெல்லி செல்கின்ற விவசாயிகளை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்கள். தஞ்சாவூரில் இருந்து 38 உழவர் களும், கும்பகோணம் இரயில் நிலையத்திலிருந்து 150 உழவர்களும் சோழன் அதி விரைவு இரயிலில் சென்னை சென்றனர்.

மற்றவர்கள் பேருந்தில் சென்னை செல்கின்றனர். தஞ்சாவூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தில் இருந்து 250 பேர் சென்னை சென்று டெல்லி செல்கின்றனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ சார்பு) சார்பாக சுமார் ஆயிரம் விவசாயிகள் இன்று சென்னை சென்ட்ரலில் இருந்துடெல்லி புறப்பட்டுசென்று, ஆகஸ்ட் 15 சுதந்திர தின போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://www.thanjai.today/