தஞ்சை பிப் 24 முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தஞ்சை அண்ணா சிலையில் இருந்து அதிமுகவினர் பேரணியாக வந்து தஞ்சை ரயில் நிலையம் எதிரே உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அதற்கு முன்னதாக எம்ஜிஆர் ஜெயலலிதா சிலை முன்பு அதிமுகவின் கொடியினை கட்டி வைத்திருந்தனர்.

அப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் ஜெயலிதா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது அவர்கள் கொண்டுவந்த கொடியையும் அங்கு கட்டியதால் காவல்துறையினர், கொடியை அகற்ற கூறினர். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதத்தை அடுத்து இரண்டு கொடிகளும் அங்கேயே கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து. சென்றதையடுத்து காவல்துறையினர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கொடியினை அகற்றக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஈடுபட்டதை அடுத்து இரண்டு கொடிகளும் அங்கேயே கட்டப்பட்டிருந்தது பின்பு தொடர்ச்சியாக மாலை அணிவிக்க வந்த அதிமுகவினர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கொடியினை அகற்றியதால் அந்த இடத்தில் அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.

காவல்துறையினர் விரைந்து வந்து இருவரையும் பேசி சமாதானப்படுத்தி கலைந்து செல்ல செய்ததையடுத்து அதிமுகவினர் மாலை அணிவித்தனர். அப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கொடியினை அகற்றி தூக்கி எறிந்தனர். இருந்த போதிலும் அந்த பகுதி பதட்டமாக காணப்படுவதால் காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர்.

எஸ்.குருநாதன் செய்தியாளர் தஞ்சாவூர்

Open chat