கும்பகோணம் ஏப்ரல் 30: கும்பகோணம் அருகே சுந்தரப்பெருமாள் கோவிலில் அதிமுக சார்பில் 5000 நபருக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசம், சோப்பு, சேனிடைசர் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தற்போது, தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகரிக்கும் வகையில் சுந்தரப்பெருமாள் கோவில் ஊராட்சியில் உள்ள 5000 நபருக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

முகக்கவசம் , சேனிடைசர், கை கழுவுவதற்கு சோப்பு உள்ளிட்ட  1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புடைய பொருட்களை ஊராட்சி மன்றத் தலைவர் சேதுராமன் தனது சொந்த நிதியிலிருந்து அதிமுக சார்பில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்  ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன் ,அரசு ஆரம்ப சுகாதார நிலைய  அலுவலர் டாக்டர் கலாராணி,   வட்டார வளர்ச்சி அலுவலர்  சுவாமிநாதன் ,கிராம ஊராட்சி அலுவலர் சுந்தரப்பெருமாள் கோவில் ஊராட்சியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.

Open chat