தஞ்சாவூர் அக் 09: தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை 5-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 840 இடங்களில் நடக்க உள்ளது என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;

முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (10ம் தேதி) 5வது கொரோனா மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது. இம்முகாமிற்காக 1.34 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 57 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 17 சதவீதம் பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போன்றவர்களுக்கு 56.5 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 66 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் கிராமப்புறப் பகுதிகளில் 721 இடங்களிலும், நகர்ப்புறப் பகுதிகளில் 119 இடங்களிலும் என மொத்தம் 840 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் 3360 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://www.thanjai.today/