தஞ்சாவூர் நவ 09: தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த சலவைத்தொழில் செய்து வருபவர்களுக்கு விலையில்லா சலவை பெட்டி வழங்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

விண்ணப்பதாரர் உரிய விண்ணப்ப படிவத்துடன் சாதி சான்று, வருமான சான்று, (ஆண்டு வருமானம் ரூ 72 ஆயிரத்துக்கு மிகாமல்) 10 ஆண்டுகளாக விலையில்லா சலவை பெட்டி பெறவில்லை என விஏஓ.வின் சான்று, குடும்ப அட்டை நகல் மற்றும் வண்ண புகைப்படம் இரண்டு ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டருக்கு நேரடியாக தபால் மூலம் அனுப்பலாம் அல்லது தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நாகராஜன் நிருபர்.
https://www.thanjai.today/