தஞ்சை மே “11, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றின் நோய் காரணமாக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதன் காரணமாக வியாபாரிகள் வணிக நிறுவனங்கள் சிறுகதை பலரும் வாழ்வாதாரங்கள் இழந்து பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.
இச்சூழ்நிலையில் கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் கல்விக் கடன் வாங்கிய மாணவர்களிடம் உடனடியாக கடனை திருப்பி செலுத்த வலியுறுத்தி பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறது. இதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
கும்பகோணம் அருகே அம்மாசத்திரத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், மேலாளர் உள்ளிட்ட வங்கி அலுவலர்கள் மாணவர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டும், வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் விட்டும் வருகின்றனர், பணத்தை உடனடியாக செலுத்தவில்லை என்றால் வீட்டிற்கு வந்து கடுமையான முறையில் வசூல் செய்ய வேண்டியிருக்கும் என மிரட்டப்பட்டு வருகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர் எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பிரச்னையை கவனத்தில் எடுத்துக்கொண்டு வங்கியில் நிர்வாகிகள் வீடுகளுக்குச் சென்று மிரட்டுவது தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் இந்திய மாணவர் சங்கம் அரவிந்தசாமி கூறியுள்ளார்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை