தஞ்சை மார்ச் 16 தஞ்சை பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதை கண்டித்து தஞ்சாவூரில் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் வேலை நிறுத்தம், வங்கித்துறையில் செயல்பட்டு கொண்டிருக்கும் 5 ஊழியர்களுக்கான சங்கங்கள் மற்றும் 4 அதிகாரிகளுக்கான சங்கங்கள் இணைந்து அகில இந்திய அளவில் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

சமீபத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதாகவும் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் அரசின் பங்கை 51 லிருந்து 24 ஆக குறைத்துக் கொள்வதாகவும் ஜெனரல் இன்சுரன்ஸ் துறையிலேயே ஒரு கம்பெனியை தனியார்மயமாக்குவதாகவும் அதற்கான சட்டத் திருத்தங்கள் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்ததை எதிர்த்து சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

கடந்த ஐந்து வருடங்களாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் வங்கிகளில் பல கோடி ரூபாய் வாராக் கடன் சுமை ஏற்பட்டு வங்கிகளை நஷ்டத்தில் தள்ளியுள்ளன என்றும் வாராக் கடன் வசூலுக்கு எந்தவித முயற்சியையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்றும் தனியார்மயமாக்கலை கண்டித்தும் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

தஞ்சாவூர் பாரத ஸ்டேட் வங்கியில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் அன்பழகன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் செயலாளர் சொக்கலிங்கம் அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகி குருநாதன் அகில இந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் மோகன சுந்தரம் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் விஜயராஜன் வினோத் முருகையன் தீபா ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.