தஞ்சாவூர் அக்: 4 – உ.பி.யில் லக்கிம்பூர் கேரி என்ற இடத்தில் பாஜக எம்.பி.க்கு எதிராக கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த உழவர்கள் மீது, ஒன்றிய அமைச்சருடைய மகன் மற்றும் குண்டர்கள் காரை ஏற்றியும், துப்பாக்கியால் சுட்டும் விவசாயிகளைப் படுகொலை செய்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

நாட்டையே உலுக்கிய இந்தச் செயல் பாஜகவின் பாசிச கோரமுகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள அனைத்து விவசாய தோழர்களும் ஜனநாயக சக்திகளும் இதை வன்மையாக கண்டிக்கின்றனர். இவர்களுக்கு எதிராக போராட வேண்டியது நமது கடமையாகும்.

ஒன்றிய அமைச்சர் அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும், அவருடைய குடும்பத்தினர் மற்றும் சம்மந்தப்பட்ட குண்டர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடி முன்பாக உழவர்கள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி வீரமோகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் கோ.திருநாவுக்கரசு, “சமவெளியில் இயக்க ஒருங்கிணைப்பாளர் சு.பழனி ராஜன், தமிழ்நாடு விவசாயிகள் இயக்க தலைவர்கள் மாவட்டச் செயலாளர் பா.பாலசுந்தரம் ,மாநிலச் செயலாளர் சாமி. நடராஜன், பி.செந்தில்குமார், சிபிஐ மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, சிபிஎம் மாநகர செயலாளர் என்.குருசாமி ,மக்கள் அதிகாரம் காளியப்பன் தொழிற்சங்க தலைவர்கள் சி.சந்திரகுமார், ஆர்.தில்லைவனம், சி.ஜெயபால், க.அன்பழகன், துரை.மதிவாணன்,ராவணன், தேவா, கேஅன்பு ,என்.சிவகுரு,அபிமன்ன், களப்பிரன், மாதர் சங்க நிர்வாகிகள் மாலதி, வசந்தி, மாணவர் சங்க ஜி.அரவிந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://www.thanjai.today/

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.