தஞ்சை சூலை: 06, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவாரூர் சென்ற முதல்வருக்கு தஞ்சையில் ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு புத்தகங்கள் பூங்கொத்து வழங்கி கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இரண்டு நாட்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு செல்லும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சியில் இருந்து வாகனத்தில் தனது குடும்பத்தினருடன் வந்தபோது தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் அருகே தஞ்சை மாவட்ட திமுக சார்பில் பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.

தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரு புறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுகூடி வரவேற்பளித்தனர் திமுக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் புத்தகங்களை பூங்கொத்துகளை வழங்கி மரியாதை செலுத்தினர் பின்பு அங்கு கூடியிருந்த பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மருத்துவர்கள் செவிலியர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். அனைவரிடமும் மனுக்களைப் பெற்றுக் கொண்டவர் சாலை மார்க்கமாக மன்னார்குடி புறப்பட்டார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://www.thanjai.today/

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.