தஞ்சை சூலை 12:-கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து உள்ளது என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த ஊரடங்கு காரணமாக கடந்த 1 ஆண்டாக பள்ளிகள் திறக்கப்பட வில்லை ஆனால் பல பள்ளிகளில் இணையதள வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மாணவர்களின் கல்விநிலை பொது அறிவு எப்படி உள்ளது. மாணவர்களின் இன்றைய காலகட்ட மனநிலை எப்படி இருக்கிறது. மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் உணர்வில் உள்ளார்களா, கல்வி கற்பதில் புதிய சூழலை எதிர்கொள்வதில் உள்ள பிரச்சினைகள் ஆகியவை குறித்து தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் மாத்தூர் பொய்யுண்டார்கோட்டை மற்றும் கும்பகோணம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இந்த கள ஆய்வின் போது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் சந்தித்து பேசினர்.

மாத்தூரில் ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா தன்னார்வலர்கள் ரஞ்சிதா ஆகியோர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணை தலைவர் சுகுமாறன், மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் முருகன், ஆகியோர் கள ஆய்வு நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வாளர்களையும் குழந்தைகளையும் ஊக்கப்படுத்தினார்.

இதுகுறித்து சுகுமாரன் கூறும்போது பெரும்பாலான மாணவர்கள் பள்ளிகள் உடனே திறக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர் மாநிலத்தின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் குழந்தை திருமணங்கள் அதிகம் நடந்துள்ளது தெரிய வருகிறது.

இந்த கள ஆய்வு முடிவுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கல்வி வளர்ச்சி நாளான வருகிற 15-ஆம் தேதி அரசிடம் அறிக்கை வெளியிட உள்ளோம் என்றனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://www.thanjai.today/