தஞ்சை மே 22 சென்னை: மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு…! தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை கடைபிடிக்க வேண்டிய சூழல் நிலவுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனையைத் தொடர்ந்து, திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்பட 13 கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், கொரோனா தொற்று பரவல் காரணமாக மருத்துவ துறையே பெரும் மன நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்தார். ஊரடங்கு காலத்தை சிலர் விடுமுறை காலத்தை போல நினைத்து ஊர் சுற்றி வருவதாகவும், இதனால், தொற்று பரவல் அதிகரித்து வருவகிறது. கொரோனா பரவலை தடுக்க வரும் நாட்டிகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்ப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. மீண்டும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தலைமை செயலகத்திலும், மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர் வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மின்னணு சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும்.
உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. swiggy , zomato போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டுமே உணவு விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் பங்குகள் வழக்கம்போல் இயங்கும். ஏடிஎம் மற்றும் அதற்கான சேவைகள் அனுமதிக்கப்படும். வேளாண் விளைபொருட்கள் மட்டும் இடு பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும். சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.
உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதி அளிக்கப்படும். மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்துக்குள் பயணிக்க இப்பதிவு தேவையில்லை. செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.

செய்தி நாகராஜன் நிருபர்
பூதலூர்

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.