தஞ்சாவூர் மே 13 கல்லணை கால்வாயில் கான்கிரீட் தளம் என்பதால். நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக கூறி அந்தப் பணிகளை நிறுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் சார்பில் மனு அனுப்பியுள்ளனர்.

தஞ்சாவூர் இயற்கை வழி வேளாண் நடுவம் தலைவர் தங்கராஜ், உள்ளிட்டோர் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கல்லணை கால்வாய் 148.43 கிலோ மீட்டர் முதன்மை கால்வாய், 636 கிலோமீட்டர் கிளை கால்வாயும், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பகுதியில் 403 ஏரிகள் மூலம் சுமார் 2.27. லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

இந்த நிலையில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கல்லணை கால்வாய் புனரமைப்பு பணி முன்னாள் முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியால் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி துவக்கி வைக்கப்பட்ட பணிகள் நடந்து வருகிறது, பணிகள் துவங்கும் முன் விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் அவசர அவசரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஆண்டுக்கு ஆறு மாதங்களில் கொண்டுள்ள இக்கால்வாய் நீர்வரத்து அல்லாத மீதமுள்ள மாதங்களில் அப்பகுதியில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் நடக்கும். விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு நிலத்தடி நீரை நம்பி செய்கிறது. ஆனால் தற்பொழுது கால்வாயில் காங்கிரட் அமைப்பதால் நிலத்தடியில் நடக்கும் நீரிழப்பு செயல்படுகிறது இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

அத்துடன் சுமார் 7 சதுர கிலோமீட்டர் நீர் பரப்பளவு கொண்ட கால்வாய் தரைதளம் மணல் பகுதியை சிமெண்ட் கான்கிரீட் கொண்டு மூடுவதால், அத்தளத்தில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து தண்ணீரில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் இல்லாமல் போயி பயிர்கள் பாதிப்படையும், மேலும் இருபுறமும் கரையில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு தனது தகைமையை இழக்கிறது.

கல்லணை கால்வாய் கட்டளைப்படி உள்ள கிராமங்களில் அமைந்துள்ள ஊற்றுகள் மூலம் கிணறுகள் மற்றும் கண்களில் நீர் முற்றிலும் வற்றி போகும் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மணல் மேல்குடி பகுதிகளில் நிலத்தடியில் கடல்நீர் உட்புகும் அபாயம் உள்ளது, குறிப்பாக தஞ்சாவூர் நகரின் நிலத்தடி நீர் ஆதாரத்தை உருவாக்குவது சிக்கல் ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

கால்வாயில் காங்கிரட் தளத்தின் அளவு உயர்த்தப்படுவதால் முழு கொள்ளளவான 4200 கன அடி குறையும் வாய்ப்பு உள்ளது வெள்ள நேரத்தில் தாங்கும் திறன் இல்லாமல் உடைப்பு ஏற்படும். இந்நிலையில் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைத்த நிலையில் பல்வேறு பாதிப்புகளால் இலங்கையில் உடவால் வா ஆறு, ஈரானில் சேவ் நதி, சீனாவில் ஷியாங் நதி, ஸ்பெயினில் ஏப்ரோ நதி என பல நாடுகளில் மீண்டும் கான்கிரட் தளத்தில் அகற்றி பழைய நிலைக்கு பல ஆண்டாக போராடி கொண்டு வந்துள்ளனர்.

அப்படி ஒரு நிலையை உருவாக்கி விடாமல் தற்போது 20 சதவீத பணிகள் முடிந்து விட்டதால் மீதம் உள்ள பகுதிகளில் தரை தளத்தில் சிமெண்ட் காங்கிரட் தளம் அமைக்காமல் கரைசலில் பக்கவாட்டில் பாலங்கள் படித்துறைகள் காங்கிரட் கட்டுமானத்தை பலப்படுத்துதல் பாசனத்திற்கு முறையாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.

Open chat