தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவையாறு பேரூராட்சி பகுதியில் 13 பேருக்கும், திருவையாறு ஒன்றிய பகுதியில் 13 ஊர்களில் 29 பேருக்கும் ஆக மொத்தம் 42 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 42 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதையடுத்து திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் கணேசன், நந்தினி, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, நடுக்காவேரி அரசு மருத்துவமனை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்மந்தப்பட்ட தெருக்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று தெருக்கள் முழுவதும் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்தனர்.

மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்துகொள்ளவும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுரை வழங்கினார்கள்.