தஞ்சை ஜூன் ‍01: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாந்தி நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கொரானா கட்டுப்பாட்டு உதவி மையம் திறக்கப்பட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் வரும் 7ம் தேதி வரை தளர்வில்லாத ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை தொண்டுள்ள கொண்ட பலரும் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது, கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்குவது ,வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை செய்து கொடுப்பது, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள கும்பகோணம் சாந்தி நகரில் தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கொரோனா கட்டுப்பாட்டு உதவி மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை மையத்தை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் திறந்துவைத்தார்.

செய்தி நாகராஜன் நிருபர்
பூதலூர்

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.