தஞ்சை மே: 10, முழு ஊரடங்கு யொட்டி தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 15 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது, அப்போது பெட்டியிலும் சாக்கு மூட்டைகளிலும் மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பண்டிகை நாட்களில் மது விற்பனை அமோகமாக அதிகரித்து அதிகரித்து வருகிறது.
அதே போல் நேரத்திலும் மது விற்பனை படுஜோராக நடைபெறுவது வழக்கம், தற்போது கொடிய நோயான கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் இதை கட்டுப்படுத்த இன்று முதல் வருகிற 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது, இதனால் மளிகை கடைகள், காய்கறிகள், இறைச்சி, கடைகள் தவிர பிற கடைகள் அடைக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகளவில் இதற்கான காரணமாக டாஸ்மாக் கடைகளில் அடைக்கப்பட இருப்பதால், மதுப்பிரியர்கள் மற்ற நாட்களை விட டாஸ்மாக் கடைகளில் கூட்டம் திரண்டனர். இதன் காரணமாக டாஸ்மார்க் கடைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது, டாஸ்மார்க் கடைகளில் முன்பு கடும் கூட்டம் நெரிசல் ஏற்ப்பட்டது, கொரரோனா பரவல் சமூக இடைவெளியை பற்றி எந்த கவலையும் இன்றி, ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு தள்ளுமுள்ளு களுக்கிடையே மதுபிரியர்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர், இரண்டு வாரங்களுக்கு தேவையான அளவுக்கு மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு சாக்குபையில் மூட்டையாகவும் கட்டி வீடுகளுக்கு எடுத்துச் சென்ற சிலர் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
இரண்டு மூன்று பாட்டில்களை வாங்கி சென்றனர், இதனால் பண்டிகை நாட்களில் கிடைக்கும் வருவாயை போல கூடுதல் வருவாய் கிடைத்தது, தஞ்சை மாவட்டத்தில் 161 டாஸ்மாக் கடைகள் வழக்கமான நாட்களில் ரூபாய் 4 கோடி ரூபாய் 5 கோடி வரை மதுபாட்டில்கள் விற்பனை நடைபெறும், ஆனால் முழு ஊரடங்கு யொட்டி டாஸ்மாக் கடைகளும் அடைப்பு என்பதால் நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் ரூபாய் 15 கோடியே 42 லட்சத்து 36 ஆயிரத்து 700 க்கும் மது விற்பனை நடைபெற்றது தீபாவளி போன்ற பண்டிகை நாட்களை விட அதிக அளவுக்கு மது விற்பனை நடைபெற்றது.
இரண்டாவது நாளாக நேற்றும் மது பிரியர்கள் அதிக அளவில் மதுக்கடை முன்பு குவிந்தனர் வந்திருந்த தங்களுக்கு தேவையான அளவுக்கு மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர் மது பிரியர்கள் வசதிக்காக டாஸ்மாக் கடைகள் காலை 8 முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டு இருந்தது இப்படி ஒரே நேரத்தில் பெட்டி பெட்டியாக சாக்கு மூட்டைகளில் கட்டி மதுபாட்டில்களை வாங்கி செல்வதால் பலர் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்தன.
சில கடைகளில் விலை உயர்ந்த மது பாட்டில்கள் இருந்தன, பலர் தாம் விலை உயர்ந்த மது பாட்டில்களை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர், பல கடைகளில் மது பிரியர்கள் கேட்கக்கூடிய மதுவகைகள் இல்லாததால் வேறு மது வகைகளை வாங்கிச் சென்றனர், நேற்று முன்தினம் முன்பை விட நேற்று கூடுதலாக மது விற்பனை படுஜோராக நடைபெற்றது.
பலர் சாக்கு முட்டைகளில் கட்டி வாங்கிச் சென்றார்கள் என்று கூறப்படுகின்றது, அவர்கள் இந்த 14 நாட்கள் முழு அடைப்பை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் விற்பதற்காகவே வாங்கியதாகக் கூறப்படுகின்றது, அரசு மது விற்பனையை மட்டும் கணக்கில் எடுக்காமல், முழு அடைப்பில் இது போன்ற கள்ளச் சந்தை ஏற்படுத்தும் கொரோனா பாதிப்பை மனதில் கொண்டு அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமாயி அரசை பொது மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
செய்தி க.சசிகுமார். நிருபர்.
தஞ்சை.