தஞ்சை மே 04: திருவையாறில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தில் 2 பேருக்கும், மேலவட்டத்தில் ஒருவருக்கும், கோதண்டராமன் நகரில் 2 பேருக்கும், புதுஅக்ரஹாரத்தில் ஒருவருக்கும், கடுவெளியில் ஒருவருக்கும், நடுக்காவேரியில் ஒருவருக்கும், கண்டியூரில் ஒருவருக்கும், சிறுபுலியூரில் ஒருவருக்கும், கீழத்திருப்பூந்துருத்தியில் 2 பேருக்கும், பொன்னாவரை கிராமத்தில் 10 பேருக்கும் ஆக மொத்தம் 22 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இவர்கள் 22 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தகவல் அறிந்த திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், திருவையாறு ஊராட்சி ஒன்றிய ஆணையர் நந்தினி, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார், நடுக்காவேரி அரசு மருத்துவமனை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பந்தப்பட்ட தெருக்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று கிருமி நாசினி தெளித்தனர்.

மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட குடும்பத்தில் உள்ளவர்களுக்குப் பரிசோதனை செய்துகொள்ளவும் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுரை வழங்கினர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்