பட்டுக்கோட்டை மே 09: பட்டுக்கோட்டை அருகே புதுக்கோட்டை உள்ளூா் கிராமத்தில் ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.

பட்டுக்கோட்டை வட்டம் புதுக்கோட்டை உள்ளூா் கிராமத்தில் கடந்த 3 நாள்களுக்கு முன் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் வந்தபோது அந்த கிராமத்தில் 23 பேருக்கு தொற்று உறுதியானது.

இதைத் தொடா்ந்து அந்தப் பகுதியை சுகாதார துறையினா் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து தகர சீட்டு கொண்டு அடைத்தனா். மேலும் வட்டார மருத்துவா் அலுவலா் தேவிபிரியா தலைமையில் , மருத்துவா்கள் சந்திரசேகா், சோமசுந்தரம், சாமிபாலாஜி, ஆகியோா் அடங்கிய குழுவினா் மருத்துவ முகாம் நடத்தினா்.

45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி, பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், அனைத்து வீடுகளுக்கும் பிளீச்சிங் பவுடா் வழங்கப்பட்டது. ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது.

முகாமில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் அண்ணாதுரை, சுகாதார ஆய்வாளா்கள் அற்புதராஜ், முத்துசாமி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கிராம நிா்வாக அலுவலா் உள்பட பலா் கலந்துக்கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.

Open chat