தஞ்சை ஏப்ரல் 1, தஞ்சை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேர் பாதிக்கப்பட்டனர் ஒரு பெண் உயிரிழந்துள்ளார், தஞ்சை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது நேற்று மட்டும் ஒரே நாளில் 106 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் 97 பேர் கொரோனா அதிலிருந்து குணமாகி வீடு திரும்பினர், மேலும் 581 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர், இதையடுத்து மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 19 ஆயிரத்து 741 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 18 ஆயிரத்து 889 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர், இந்த நிலையில் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது பெண் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார், இதையடுத்து இதுவரை மாவட்டத்தில் 271 பேர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.