தஞ்சாவூர்: மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கும்பகோணத்தில் தெரிவித்தார்.

ஜோகோ என்ற தனியார் நிறுவனத்தினர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்காக 200 கட்டில்கள் மற்றும் 200 படுக்கைகளை நன்கொடையாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவிடம் வழங்கினர் .

இதனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் செய்தியாளர்களிடம் பேசும்போது, தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 32 ஆயிரம் நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதில் 27,420 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும், தற்பொழுது 2900 நபர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ,

1500 நபர்கள் தத்தம் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர் என்றும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 70 சதவீத அளவிற்குப் படுக்கைகள் நிரம்பி உள்ளதாகவும் ,ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிக்கு தேவை அதிகம் இருப்பதாகவும், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மேலும் கூடுதலாக ஆக்சிஜன் கிடைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கும்பகோணம் நகரில் மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக பல்வேறு பள்ளி கூட விளையாட்டு திடல்களில் காய்கறிகள் விற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் திரு சாக்கோட்டைஅன்பழகன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்

Open chat