தஞ்சாவூர் நவ:17- தஞ்சை அண்ணா சிலையில் இருந்து பனங்கள் கட்டிடம் செல்லக்கூடிய சாலையோரத்தில் செல்போன் கடைகள் துணிக்கடைகள் செல்போன் பழுது பார்க்கும் கடை டீக் கடைகள் செருப்புக் கடைகளிலும் 54 கடைகள் உள்ளன மழைநீர் வடிகால் மீது இந்த கடைகள் கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது மேலும் இந்த கடைகள் பகுதியில் மழைநீர் வடிகால் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது இதற்காக கடைகளை அகற்ற செய்ய மாநகராட்சி வலியுறுத்தியது இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர், அப்போது அங்கிருந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடைப்பிடிக்கப்படவில்லை வியாபாரிகள் தொடர்ந்து கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு தற்போது கடைகளில் இருக்கும் இடத்திற்கு பின்பகுதியில் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடைகளை இடிக்க ஏதுவாக மின் இணைப்பை துண்டிக்க மாநகராட்சி மின் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் கடைகளில் வைக்கப் போவதாக நேற்று தகவல் பரவியது இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் அதிமுகவினர் அங்கு திரண்டு வந்தனர் இதையடுத்து தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜகுமார் தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேலும் வியாபாரிகள் மற்றும் திமுகவினர் அந்த பகுதியில் சாலையோரம் அமைந்திருந்தனர் காலை 10 மணி முதல் மாலை வரை அவர்கள் அங்கேயே திறந்திருந்தன இதுகுறித்து அவர்கள் கூறுகையில் இந்த கடைகளில் யாருக்கும் பாதிப்பு இல்லை தற்போது கடைபிடிக்க வேண்டாம் இதனை நம்பி 500 குடும்பங்கள் உள்ளன இங்கு கடைகள் இருந்தால் தான் எங்களுக்கு வாழ்வாதாரம் ஆனால் மாற்று இடம் கூட வழங்காமல் கடைகளை இடிக்க மாநகராட்சி முயற்சிக்கிறது.

எனவே எங்களுக்கு இந்த பகுதியிலேயே கடைகள் நடத்த அனுமதி கொடு எங்களின் வாழ்வாதாரத்தை காக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் இந்த நிலையில் மாலை 4 மணிக்கு இந்த கடைகளுக்கு செல்லும் மின் இணைப்புகளை துண்டித்து அதற்காக மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர் அப்போது போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர் இடத்தை மின் இணைப்புகளை துண்டித்து அதற்காக மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்கள் அங்கு வந்தனர் அப்போது அங்கு திரண்டு இருந்த வியாபாரிகள் மற்றும் கட்சிக்காரர்கள் மாநகராட்சி அதிகாரிகள் போலீசாரை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு செருப்புக் கடையில் வேலை பார்க்கும் தஞ்சை கரந்தையை சேர்ந்த ரமேஷ் (51) தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றினர் பின்னர் ரமேஷ் போலீஸ் ஜீப்பில் ஏற்றி தஞ்சை நகரை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் வியாபாரிகள் மற்றும் கட்சிகாரர்கள் கலைந்து சென்றனர்.

க.சசிகுமார். நிருபர்.
https://www.thanjai.today/

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.