தஞ்சாவூர்செப் :23- தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நகர ஊரமைப்பு சட்டம் 1971 விதிகளின்படி உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்ட உணவகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மதுபான பார் உள்ளிட்ட மேலும் 3 கடைகளில் நோட்டிஸ் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழைய தஞ்சாவூர் பேருந்து நிலையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா உள்ளது. இந்த சபா குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இந்த சபாவின் முன் பகுதியில் கடைகள் இயங்கி வருகிறது அதில் ஒரு உணவகம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது. அங்கே தேவர் ரெஸ்டாரண்ட் என்ற உணவகம் உள்ளது. மேலும் இந்த வளாகத்தில் மதுபான கூடம் பேக்கரி கடை செல்போன் கடையில் ஆகியவையும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த உணவகம் மற்றும் மதுபானம் கூடம் பேக்கரி கடை , செல்போன் கடை ஆகியவை நகர ஊரமைப்பு சட்டம் 1971 விதிகளின்படி உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதால் இந்த கட்டிடங்களை பூட்டி சீல் வைக்க போவதாக மாநகராட்சி சார்பில் கடந்த 13. 8. 2021, அன்று அறிவிப்பு கொடுக்கப்பட்டது.

இதையடுத்து கடைகளை நடத்தி வந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் நீதிமன்றம் கட்டிடம் தொடர்பாக அரசிடம் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்திருந்தது. ஆனால் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் உணவகத்துக்கு அனுமதி பெற்றதற்கான விவரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் தான் உணவகம் நேற்று சீல் வைக்கப்பட்டது அதன்படி மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், இளநிலை பொறியாளர் கண்ணதாசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தை பூட்டி சீல் வைத்தனர்.

மேலும் மதுபான கூடம், பேக்கரி, செல்போன் கடை ஆகியவற்றுக்கு கால அவகாசம் உள்ளதால் அந்த கடைகளில் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அந்த நோட்டீஸில் சுதர்சன சபா (பேக்கரி மதுபான கூடம் செல்போன் கடை) கட்டிடத்திற்கு 13. 8 .2021 அன்று நகர் ஊரமைப்பு சட்டம் 1971 -ன் படி அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி கட்டிடத்தை ஒரு அறிவிப்பு உரிய அனுமதி பெற்று வரும் சமர்ப்பித்தனர் தான் அல்லது திருத்தி அமைக்க தான் இந்த கட்டிடம் நகர் ஊரமைப்பு சட்டத்தின்படி வருகின்ற 28-ம் தேதி காலை 10 மணிக்கு பூட்டி சீல் வைக்க உத்தரவிடப்படுகிறது எனவே பொருட்களை அப்புறப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது சீல் வைக்கப்படும் கட்டிடத்திற்கு பாதுகாப்பு தர வேண்டியது சட்டப்படி கட்டிட உரிமையாளரின் முழு பொறுப்பாகும் எனவே தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://www.thanjai.today/

Open chat