தஞ்சை பிப்.23 தஞ்சை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூதனப் போராட்டம் நடைபெற்றது. 


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, முறைசாரா த் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 


மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம், விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஏ.கோவிந்தசாமி, மணல் மாட்டு வண்டி சங்கம் கே.சோமசுந்தரம், வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் மோரிஸ் அண்ணாதுரை, ஒன்றியச் செயலாளர் சுந்தரபாண்டியன், கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், பெஞ்சமின், முருக.சரவணன், கிளைச் செயலாளர்கள் பாலகிருஷ்ணன், பாண்டியன், கே.செந்தில் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்தும், விலைவாசியைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். 


போராட்டத்தின் போது, விலைவாசி உயர்வைக் குறிக்கும் வகையில், எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், நாமம் பூசியும், மோட்டார் சைக்கிளை மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்றும் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. 

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.