தஞ்சை மார்ச் 2,தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் தந்தை பெரியார் சிலையை அவமதித்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஒரத்தநாட்டில் தந்தைபெரியார் சுவையில் காவி துண்டு தலையிட்டு வைத்த மர்ம நபர்கள் அணிவித்து விட்டு ஓடி விட்டனர் இதுகுறித்து தகவலறிந்த திராவிடர் கழகத்தினருக்கு ஏராளமானோர் அவ்விடத்தில் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு ஒரத்தநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர் இதில் மன நோயால் பாதித்த பெண் தான் இச் செயலில் ஈடுபட்டது என தெரிவித்தனர், இந்த நிலையில் மாலை தந்தை பெரியார் சிலை முன்பு ஒரத்தநாடு ஒன்றிய திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் அமர் சிங் தலைமை வகித்தார், ஒன்றிய தலைவர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார், தந்தை பெரியார் சிலையை அவமதித்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், அறிவுலக ஆசான் தந்தைப் பெரியார் சிலை உட்பட பெரும் தலைவர்கள் சிலைகள் அவமதிக்கும் போதெல்லாம் அதற்கு காரணம் மனநோயாளி என அடையாளப்படுத்தப்படும் அதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
எனவே ஒரத்தநாட்டில் பெரியார் சிலையை அவமதித்த மறுபடி அவர்களை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள்ஆஆர்ப்பாட்டத்தில் மாநில திராவிடர் கழக அமைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன், மாநில பொதுச் செயலாளர் ஜெயக்குமார் மாவட்ட செயலாளர் அருணகிரி மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக பொறுப்பாளர்கள் அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.