தஞ்சை சூலை :9- தஞ்சை சமூக ஆர்வலர் ஸ்டான்சுவாமி மரணத்திற்கு நீதி கேட்கும் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறை சட்டங்களை புகைக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் பாதிரியாருமான ஸ்டான்சுவாமி மும்பையில் தனியார் மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார் ஸ்டான்சுவாமி மரணத்திற்கு நீதி கேட்டும், ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமை வகித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகி பாலசுப்பிரமணியன் விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் சொக்கா ரவி, மக்கள் அதிகாரம் காளியப்பன், தேவா, தாளாண்மை உழவர் இயக்கம் திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்கம் பழனிராசன், தமிழ் தேசிய முன்னணி அயனாவரம் முருகேசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ் எம் ஜெயினுலாபுதீன், அருண்ஷோரி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர் இதேபோல் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்செல்வி கண்டன உரையாற்றினார்.

மாவட்ட குழு உறுப்பினர் செல்வம் திருவோணம் ராமசாமி ஒன்றிய குழு உறுப்பினர்கள் முருக சரவணன், மோரிஸ் அண்ணாதுரை கிளைச் செயலாளர் பாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் காளிதாஸ் நகர செயலாளர் சுதாகர் மாவட்ட குழு உறுப்பினர் தனசீலி விடுதலை சிறுத்தைகள் தொகுதி பொறுப்பாளர் சக்கரவர்த்தி ஒரத்தநாடு ஜெய்சங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் பேராவூரணி ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://www.thanjai.today/

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.