தஞ்சை மே 27: தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் தமுமுக சார்பில் சுமார் 15000 ரூபாயில் 100 குடும்பங்களுக்கு காய்கறி, பொருட்கள் வழங்கப்பட்டது.
தமிழக அரசு கடந்த திங்கள்கிழமை முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கை பிறப்பித்தது. இதனால் காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்தது. ஒரு வாரத்திற்கு உண்டான பொருட்களை வாங்க வேண்டும் என்று நினைத்து பெரும்பாலான பொதுமக்கள் வெளியே வந்ததால் காய்கறி கடை, மளிகை கடைகளிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
மேலும் விலையும் உயர்ந்து இருந்தது. கூடுதல் விலைக்கு காய்கறிகள், பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசும் எச்சரித்தது. இந்நிலையில் ஏழை மக்களின் சிரமத்தை உணர்ந்து மதுக்கூர் தமுமுக சார்பில் ரூ.15 ஆயிரம் மதிப்பில் 100 குடும்பங்களுக்கு காய்கறி, பொருட்கள் வழங்கப்பட்டது.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்