தஞ்சை பிப் 21 தஞ்சையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திமுகவினர் தஞ்சையின் முதன்மையான வீதிகள் வழியாக சைக்கிள் பேரணி.

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே உள்ள நிலையில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கிய நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தஞ்சை தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் தலைமையில் திமுகவினர் சைக்கிள் பேரணியை நடத்தினர். தஞ்சை கொண்டி ராஜபாளையத்திலிருந்து 500-க்கும் மேற்பட்டோர் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இப்பேரணி தஞ்சை அண்ணா சிலையை வந்தடைந்தது.

பேரணியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். உடனடியாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.

Open chat