தஞ்சை ஏப்ரல் 27: கும்பகோணம் அருகே கடிச்சம்பாடியில் நெல் நடவு செய்யப்பட்ட வயலில் ட்ரோன் விமானம் மூலம் திரவ உரம் தெளிக்கும் பணி நடைபெற்றது .

விவசாயத்தில் இயந்திரங்களின் பங்களிப்பு தற்போது அதிகமாக தேவைப்படுகிறது. இந்நிலையில் கும்பகோணம் அருகே கடிச்சம்பாடி கிராமத்தில் நெல் நடவு செய்யப்பட்டுள்ள வயல்வெளியில் பால்,தயிர், நெய்,கரும்பு சாறு, மாட்டு சாணம் போன்ற பொருட்களால் தயாரித்த பஞ்சகாவிய திரவ உரம் ட்ரோன் விமானம் மூலம் தெளிக்கும் பணி நடைபெற்றது .

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 12 நிமிடத்தில் திரவ உரம்  அடிக்கப்பட்டது .விதை தூவுதல், பூச்சி மருந்து அடித்தல் ,ரசாயன பூச்சிமருந்து, இயற்கை வழி பூச்சிமருந்து போன்ற பணிகளை  ட்ரோன் விமானம் மூலம் பயன்படுத்த முடியுமென விவசாயி மற்றும் பொறியியல் பட்டதாரி வெங்கட்ராமன் தெரிவித்தார்.

விவசாய பணிகளுக்கு இயந்திர பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஒருபுறம் விவசாயப் பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை ,மறுபுறம் கிடைக்கும் ஆட்களுக்கு அதிகக் கூலி கொடுக்க வேண்டிய கட்டாயம் . எனவே விவசாயத்திற்கு இயந்திர பயன்பாடு அவசியம் தேவைப்படும் நிலையில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள  ட்ரோன் விமானத்தை சாதாரண விவசாயிகளால் வாங்க முடியாத சூழ்நிலை உள்ளதால் மத்திய, மாநில அரசுகள் இதுபோல்  ட்ரோன் விமானம் வாங்க மான்யத்துடன் நிதி உதவி அளிக்கவேண்டும் என விவசாய சங்க நிர்வாகி விமலநாதன் தெரிவித்தார்.

 ட்ரோன் விமானம் மூலம் இயற்கை வழி திரவ உரம் தெளிக்கும் பணியினை காண ஏராளமான விவசாயிகள் கடிச்சம்பாடி கிராமத்தில் குவிந்தனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.