தஞ்சை ஏப்.5, தஞ்சை கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது, இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்து மிகப்பெரிய முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர் பண்டிகை ஆகும், சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்கின்ற நம்பிக்கையில் இந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக இந்த ஈஸ்டர் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகின்றது.

இதையொட்டி வழக்கமாக இயேசு பண்டிகைக்கு முதல் நாள் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெறும் ஆனால் தற்போது கருணா தொற்று காரணமாக சிறப்பு திருப்பலி முன்னதாகவே சில ஆலயங்களில் நடைபெற்ற சில ஆலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனை நடைபெற்றது அப்போது கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி சாதனையில் ஈடுபட்டதஞ்சை திரு இருதய பேராலயத்தில் பங்குத்தந்தை இருதயராஜ் அடிகளார் தலைமையில் திருப்பலி எளிமையாக நடைபெற்றது.

இந்த திருப்பலியில் உதவி பங்குத்தந்தை அலெக்சாண்டர் சித்தேரி முத்து துணை தலைவர் வின்சென்ட் செயலாளர் ஆனந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் திருப்பலி முடிந்ததும் கழுத்தில் உள்ள வியாகுல மாதா ஆலயத்தில் இயேசு ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.

இதேபோல் தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை c.s.i. கிறிஸ்து நாதர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி சபை ஆயரின் தலைமையில் நடந்தது இதில் செயற்குழு உறுப்பினர்கள் திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர் இதேபோல் தஞ்சை அடைக்கல மாதா ஆலயம் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம் அண்ணாநகர் செபஸ்தியார் ஆலயம் தஞ்சை மாநகரில் உள்ள சிஎஸ்ஐ தூய பேதுரு ஆலயம் குழந்தை இயேசு ஆலயம் உட்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.

Open chat