தஞ்சை மே: 27, கொரோனா சிகிச்சை நிலையம் தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன் எம்பிக்கள் எஸ் எஸ் பழனி மாணிக்கம், சே. ராமலிங்கம், சண்முகம், எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், சாக்கோட்டை அன்பழகன், அண்ணாதுரை, அசோக்குமார், டி. கே. ஜி. நீலமேகம் ஜவாஹிருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் டாக்டர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்தக் கருத்துக்களை எல்லாம் கேட்டறிந்த பிறகு இறுதியாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருத்துரை வழங்கினார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு தகவல் மையத்தின் செயல்பாடு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அவர் தஞ்சை மேம்பாலம் அரசு காது கேளாதோர் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியும், தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் ஆக்சிசன் வசதியுடன் கூடிய 250, படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாலை தஞ்சை மேரிஸ் கார்னர் அருகே உள்ள ரயில்வே மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையத்தையும், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேர்வுக் கூடத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஆக்சிசன் வசதியுடன் கூடிய 80 படிக்க வசதிகளையும், கலையரங்கத்தில் படுக்கை வசதிகள் அமைக்கப்படுவதை வல்லம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் செயல்பட்டு வரும் சிகிச்சை மையத்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்படும் கொரோனா தடுப்பு ஊசி மையத்தையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்,