தஞ்சாவூர் பிப் 28 தஞ்சை மாவட்டத்தில் 102 மையங்கள் பதட்டமான ஓட்டு சாவடி மையங்கள் ஆக கண்டறியப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தேதியில் தமிழகத்தில் தேர்தல் நடத்தை அமுலுக்கு வந்துள்ளன இந்த நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களுக்கு கூறியதாவது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, மாவட்டத்தின் எல்லைகள் 9 இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், தேர்தல் தொடர்பாக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம்.

ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் தனிநபர் பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் செல்ல வேண்டும் இல்லை என்றால் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்படும் அதேபோல் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பறக்கும் படை குழுவினர் என எட்டு தொகுதிகளிலும் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது மேலும் நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது மாவட்டத்தில் 2291 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளது இதில் ஆயிரத்து 550 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் கூடுதல் ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி கூடுதலாக 595 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது மொத்தம் 2886 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது இதில் 102 மையங்கள் பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்கள் ஆக கண்டறியப்பட்டுள்ளது பதற்றமான ஓட்டுச்சாவடிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்படும் மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சியினரின் கொடி மரங்கள் பேனர்களை இன்று 28ஆம் தேதிக்குள் கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் 14,000 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் பேட்டியின்போது கூறினார் உடன் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்தேஷ்முக் சேகர் சஞ்சய் டிஆர்ஓ அரவிந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை