தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 27ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் அரசு ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கும்பகோணம் ஆகியவை இணைந்து நடத்தும் இம்முகாமை நடத்துகின்றன.

இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 27ம் தேதி கும்பகோணம் அரசு ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 8.30 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் சென்னை, திருப்பூர், கோவை, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 50க்கும் அதிகமான முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ., கல்வி தகுதிகளுக்கு உரிய வேலை நாடுவோருக்கு ஆயிரத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்பினை அளிக்க உள்ளனர். எனவே விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் சுயவிபரம் அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை அளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்கள் சுய விபரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்துகொள்ள வேண்டும் மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள ஏதுவாக தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை, எதிர்பார்க்கும் கல்வித்தகுதி மற்றும் ஊதியம் போன்ற விபரத்தை [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு 04362 -237037, 277907 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்தகவலை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

நாகராஜன் நிருபர்
https://www.thanjai.today/

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.