தஞ்சை மே 12 டெல்டா பாசனத்திற்காக இந்த ஆண்டு மேட்டூர் அணையை ஜூன் 12ஆம் தேதி திறக்கலாம் என வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது .வேளாண் வல்லுநர் குழு பேரவை சார்பில் தமிழக அரசுக்கு மேட்டூர் அணை பாசனம் பகுதி பயிர் சாகுபடியும் நீர்வழங்கல் திட்டமும் என்ற பரிந்துரை கையேட்டை அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து குழுவை சேர்ந்த கலைவாணன் கூறியதாவது மேட்டூர் அணையில் தற்போது 62 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பாசனத்துக்காக 167. 25 டிஎம்சி தண்ணீர் பெற வேண்டும், எனவே மொத்தமாக 229 டிஎம்சி தண்ணீர் பாசனத்துக்கு கிடைக்கும் மேட்டூர் அணை நீரை கொண்டு தமிழகத்தில் 12 மாவட்டங்கள் காரைக்கால் பகுதியில் பயனடைகின்றன, இப்பகுதியில் இந்த ஆண்டு குறுவை பட்டத்தில் 3.50 லட்சம் ஏக்கர் காலடியில் 3.25 லட்சம் ஏக்கர் சம்பா பருவத்தில் 11 லட்சம் ஏக்கர் வாழை கரும்பு உள்ளிட்ட பயிர்கள் 80 ஆயிரம் ஏக்கர் என மொத்தம் 18 லட்சம் ஏக்கரில் சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து நெல் பருவத்திலும் நாற்று விட்டு நடவு செய்தால் இந்த நீர் போதாது எனவே நிலத்தடி நீர் மற்றும் மழை நீரை முழுவதுமாக பயன்படுத்த வேண்டும், குறுவை பருவத்தில் 1.75 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய நிலத்தடி நீர் வசதி உள்ளது, மேட்டூர் அணையை திறப்பதற்கு முன்பாகவே பரப்பில் நாற்று விட்டு நடவு செய்தால் மேட்டூர் அணையிலிருந்து நீர் தேவை சுமார் 15 டிஎம்சி குறைகிறது.

இதேபோல் சம்பா பருவத்தில் 5 லட்சம் ஏக்கரில் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும் மழை நீரை கொண்டு புழுதி உழவு செய்து நேரடி நெல் விதைப்பு செய்வதால் நாற்றங்கால் தயாரிப்பு நடவு வயல் சேருதல் போன்றவற்றிற்கு நீர் தேவைப்படுவதால் 25க்கு மேல் அணை நீரை சேமிக்க முடியும் நிலத்தடி நீரையும் மழையையும் பயன்படுத்தினால் அணை நீர் 229 டிஎம்சி கொண்டு சாகுபடி செய்ய முடியும்.

எனவே நிகழாண்டு பயிர் சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையை இயல்பாக திறக்க வேண்டிய ஜூன் 12ஆம் தேதி திறப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது, இதற்கு வசதியாக நிலத்தடி நீர் வசதி உள்ள இடங்களில் எல்லாம் அணையை பிறப்பதற்கு முன்பாகவே குருவை நாற்று விட்டு நடவு செய்து முடித்திட விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விவசாயிகள் முன் ஏற்பாடு செய்து செயல்பட வசதியாக அனைவருக்கும் காலத்தை முன்கூட்டியே வருகிற 15-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் நிலத்தடி நீரை பயன்படுத்தும் குறுவை சாகுபடி விவசாயிகளின் வசதிக்காக மே ஜூன் மாதங்களில் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு படி அணைக்கு நீர் பெற்றுத்தர வேண்டும் பாசன வாய்க்கால்கள் ஆறுகள் ஏரிகள் போன்றவற்றை மராமத்து செய்து சீரமைக்க போதிய நிதி அளித்து அணைப்பதற்கு முன்பாகவே பணிகளை முடித்து பாசன திறனை உயர்த்தி அணை நீர் தேவைகளை குறைக்க வேண்டும் மழை நீரை முழுமையாக பயன்படுத்த சம்பா சாகுபடி பரப்பில் 50 சதவீதம் நேரடி நெல் விதைப்பு செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குவதுடன் சிறப்பு முகாம் நடத்த வேளாண் துறைக்கு அறிவுறுத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.

Open chat