தஞ்சாவூர் ஆக 01: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் குடும்ப விழா நடைபெற்றது.

இக்காவல் நிலையத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக புகாரளித்த பெண்களை வரவழைத்த காவல்துறையினா் அவா்களுக்கும், அவா்களது கணவா்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆலோசனைகளை வழங்கி, அவா்களை மீண்டும் சோ்த்து வைத்துள்ளனா்.

இவ்வாறு சோ்த்து வைக்கப்பட்ட தம்பதியினா் ஒற்றுமையாக வாழ்கிறாா்களா எனத் தெரிந்து கொள்ளும் வகையில், பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையம் சாா்பில் குடும்ப விழா நடத்தப்பட்டது.

பட்டுக்கோட்டை, திருச்சிறம்பலம், பேராவூரணி, ஒரத்தநாடு பகுதிகளைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட தம்பதியினா் விழாவில் பங்கேற்றனா். தஞ்சாவூா் மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் ராஜேஸ்வரி, அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் ஏ.ஜெயா, உதவி ஆய்வாளா் லதா ஆகியோா் ‘குடும்ப வாழ்வும், விட்டுகொடுத்து வாழ்தலும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினா்.

தொடா்ந்து விழாவில் பங்கேற்ற தம்பதியினரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு, தங்களுக்காக காவல்துறையினா் மேற்கொண்ட முயற்சிகளைக் கூறி பேசினா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://www.thanjai.today/

Open chat