புதுச்சேரி: வயது மூப்பால் பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் என்கிற கி.ரா (99) புதுச்சேரியில் காலமானார்.

கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படுபவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். ‘கோபல்லபுரத்து கிராமம்’ நாவலுக்காக இவருக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது. மேலும் இவர் பல சிறுகதை தொகுப்புகள், குறுநாவல்கள், கட்டுரை தொகுதிகள், நாவல்களையும் எழுதியுள்ளார்.

இவரின் பல புத்தகங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இவர் இலக்கிய சிந்தனை விருது. தமிழக அரசு விருது, கனடா இலக்கிய தோட்டம் வழங்கிய தமிழ் இலக்கிய சாதனை விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்

வட்டார நடை எழுத்துக்கு இலக்கியத் தகுதியை ஏற்படுத்திய கி. ராஜநாராயணன் என்னும் கி.ரா. காலமானது இலக்கிய ஆர்வலர்களையும், படைப்பாளர்களையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதையடுத்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Open chat