தஞ்சை மார்ச், 5: தஞ்சை அடுத்த குறும்பூண்டிகட்டளை கால்வாயில் தண்ணீர் திறந்துவிடாததால், ஏரியில் தண்ணீர் இன்றி, பாசன வசதி பெறும் 2000 ஏக்கர் சம்பா பயிர்கள் கருகும் அபாயம் இருப்பதாக தெரிவித்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள்ஏரியில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்.


இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர்விவசாயி கண்ணன் கூறுகையில் இந்தக் கட்டளைகளை கண்ணீர் வர வேண்டி மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித் துறையிடம் ஒரு மாதம் காலமாக பலமுறை வலியுறுத்தியும் தண்ணீர் தரவில்லை தண்ணீர் வராததால் விளை நிலங்கள் காய்ந்து கிடக்கிறது, தேர்தல் நேரத்தில் அவர்கள் பணியை மட்டும் பார்க்கும் அதிகாரிகள் இங்கு சாகக்கிடக்கும் விவசாயிகளை கண்டுகொள்வதில்லை நான் கேட்டுக்கொள்வது ஓட்டு போட முடியும் அதனால் மின்சார காலத்தில் கவனம் செலுத்தி தண்ணீரைவிட கேட்டுக்கொள்கிறோம்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.

Open chat