தஞ்சை பிப்.18–

கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் அரசு மணல் குவாரியில் சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக மணல் அள்ளப்படுவதாலும், கனரக வாகனங்கள் மூலம், சட்ட விரோத தனியார் மணல் கொள்ளையினாலும் இப்பகுதியில், இயற்கை வளம், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. 

எனவே, சட்ட விரோத மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு மணல் குவாரிகளை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாய அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், பூதலூர் அருகே திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றுப்படுகையில், ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் வெ.ஜீவகுமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பி.முருகேசன், சிபிஎம் நிர்வாகிகள் சிவசாமி, உதயகுமார், மாதர்சங்கம் கலைச்செல்வி, விவசாயிகள் கூத்தூர் ரெங்கராஜன், பூண்டி திருநாவுக்கரசு, காங்கிரஸ் கவுன்சிலர் படுகை ராஜேந்திரன், நாம் தமிழர் கட்சி தென்னரசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக காவல்துறை பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.