தஞ்சாவூர் செப் 29 தஞ்சை மாவட்டத்தில் வருகிற பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய உழவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று நுகர்பொருள் வாணிப கழகம் அறிவித்துள்ளது.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி கலெக்டரிடம் உரிய அனுமதி பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அந்தந்த மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல்கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

உழவர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய ஏதுவாக ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் இதற்காக கொள்முதல் பருவம் 2021 2022 உழவர்கள் தங்களது பெயர் ஆதார் எண் இருந்தால் எண் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளியமுறையில் www.tncsc.tn.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட உடன் உழவர்கள் நிலம் இருக்கும் கிராமங்களில் அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அதன்படி இணையவழியில் மூலமாகவே கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் பெறப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பெயர் நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் உழவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.

உழவர்கள் தங்களது செல்போன் எண்ணில் பெறப்பட்ட ஒரு செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம் இந்த இணையவழி பதிவு திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் மேலும் கூடுதல் விவரங்களுக்கு தஞ்சை மண்டல முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://www.thanjai.today/

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.