தஞ்சாவூர் சூலை 25 தஞ்சை மாவட்டத்தில் 807 பெண்களுக்கு தங்க நாணயம் நிதி உதவி வழங்கப்படுகிறது என மயிலாடுதுறை எம்.பி., ராமலிங்கம் கூறினார், தஞ்சை ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை குறித்து அனைத்து திருமண நிதி உதவித் திட்டம் மற்றும் ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கத்தினை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் மயிலாடுதுறை எம்.பி இராமலிங்கம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் வழங்கினர்.

பின்னர் அவர் பேசுகையில் 1989ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தமிழக அரசு எட்டாம் வகுப்பு வரை படித்த இளம்பெண்களின் திருமண நிதி தொகை ரூபாய்5015 ஆயிரம் பெண்களுக்கு வழங்க முடிவு செய்து அத்திட்டத்திற்கு மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம் என்று பெயரிடப்பட்டது.

இத் திட்டம் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டு தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது தற்போது 100 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டப் படிப்பு பயின்ற பெண்களுக்கு ரூபாய் 50,000, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் வழங்கப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க 2021- 22 ஆம் ஆண்டில் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் 807 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் வீதம் 6 ஆயிரத்து 456 கிராம் தங்கமும் ரூபாய் 2,69,00,000, நிதியுதவியும் ஆணையிடப்பட்டுள்ளது அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 807 பெண்களுக்கு தங்க நாணயம் மற்றும் நிதி உதவி வழங்கப்படுகிறது.

இதில் 269 பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் வீதம் ரூபாய் 1, 34,50,0000 -நிதி உதவியுடன் 8 கிராம் தங்க நாணயம் 538 பட்டப்படிப்பு பயிலாத பெண்களுக்கு தலா 25 ஆயிரம் வீதம் ரூபாய் 1, 34,50,000 நிதி உதவியுடன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

இதில் தஞ்சாவூர், திருவையாறு, அம்மாபேட்டை, பாபநாசம் ஆகிய வட்டாரங்களில் உள்ள 331 பயனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள 331 தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது ரூபாய் 1,7,50,000-மதிப்புள்ள நிதி உதவி தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. என்றார்.

நிகழ்வில், திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரன், தஞ்சை எம்.எல்.ஏ., டி கே ஜி நீலமேகம் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) செல்வ சுரபி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி திருவையாறு ஒன்றியக்குழு தலைவர் அரசபகாரன் பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி சமூக நல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://www.thanjai.today/

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.