தஞ்சை ஏப்ரல் 01 மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை தமிழக அரசு ஆதரிப்பதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் பிரச்சாரத்தில் பேசினார்.
தஞ்சை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.கே.ஜி நிலவரத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் தஞ்சை சிவகங்கை பூங்கா எதிரே பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதாவது தமிழகத்தில் தாய்மொழி வழிக் கல்வி மருத்துவக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி மற்றும் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் தமிழகத்தின் உரிமையை மத்திய அரசுக்கு அதிமுக அரசு தாரை வார்த்து விட்டது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பச்சைத் துண்டு போர்த்தினால் அவர் விவசாயி ஆகி விட முடியாது மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் ஆதரிப்பதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் சட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரிப்பதன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டார்.
மத்திய அரசு விளைநிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துவிட்டது பெட்ரோல் டீசல் எரிவாயு நாளுக்கு நாள் விலை ஏறிக் கொண்டே வருகிறது எனவே மத்திய பாஜக அரசுக்கும் பாடம் புகட்டுவோம் மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கும் அதிமுகவையும் தோற்கடிப்போம் என்று தஞ்சை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி கே ஜி நீல மேகத்துக்கு ஆதரித்து வாக்குகள் சேகரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.