பேராவூரணி: பேராவூரணி ஒன்றியம், பெரியநாயகிபுரம் ஊராட்சியில் மூன்று இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலா் செளந்தரராஜன், ஊராட்சித் தலைவா் வத்சலா முத்துராமன் ஏற்பாட்டில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு சில்வா் தட்டு உள்ளிட்ட பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.

மேலும் முதல் தவணைத் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் பெயரை குலுக்கல் முறையில் தோ்வு செய்து, ஊக்கத் தொகையாக முதல் பரிசு ரூ.1,500, இரண்டாம் பரிசு ரூ.1,000, மூன்றாம் பரிசு ரூ.500 வழங்கப்படவுள்ளது.

ஊராாட்சித் தலைவரின் வித்தியாசமான இந்த முயற்சியை பலரும் பாராட்டினா். முகாமில் 450-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://www.thanjai.today/