தஞ்சை ‍சூன் 03 தமிழ்நாடு அரசு பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றது. கூட்டம் கூடுவது, கூடுதலான மக்களை கொண்டு திருமண நிகழ்ச்சிகளை நடத்துவது, இறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டி வருகின்றது.

குறிப்பாக இறப்பு நிகழ்ச்சி கலந்து கொண்டு திரும்புகின்றவர்களை கொரோனா அதிகம் பாதிப்பதை காண முடிகின்றது. இந்நிலையில், தஞ்சை அருகே நாஞ்சிக் கோட்டை ஊராட்சி வடக்குத்தெருவில் வசிக்கும் 24 பேருக்கும், இதே ஊராட் சிக்கு உட்பட்ட கூத்தஞ்சேரி, இனாத்துக்கான்பட்டியில் 46 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது இதனை அடுத்து அந்தப் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

இதுகுறித்து ஊராட்சி தலை வர் நாஞ்சி சத்தியராஜ் கூறும்போது, “நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் 2 இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்றவர்கள் மூலம் கொரோனா பரவியதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த கிராமத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையினர் நேற்று 100 பேருக்கு கரோனா பரிசோதனை செய்தனர். யாரும் வீடுகளைவிட்டு வெளியே வரக் கூடாது, முகக்கவசம் அணிய வேண்டும் என ஒலிபெருக்கியில் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

செய்தி நிருபர்
தஞ்சை டுடே

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.