தஞ்சை ஏப்ரல் 15 தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலகத்தில் பணியின் போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி பணியின்போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது மேலும் நேற்று முதல் வருகிற 20-ஆம் தேதி வரை தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்படுகிறது அதன்படி நேற்று காலை தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலகத்தில் பணியின் போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர் நினைவாக அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

பின்னர் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோ பிரசன்னா உதவி மாவட்ட அலுவலர் இளஞ்செழியன் நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் இது தீ தடுப்பு சாதனங்கள் முறையாக பராமரிக் தீ விபத்துக்களை தடுப்பது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் செய்து காண்பிக்கப்பட்டது.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை.

Open chat