தஞ்சை மே 15 தமிழக அரசின் உத்தரவுக்கு இணங்க அறநிலை துறையின் மூலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

கொரோனா தொற்று பரவலின் காரணமாக மக்கள் வேலைவாய்ப்பு இழந்து போதிய வருவாய் இன்றி தவித்து வருகின்றனர், மேலும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதால் உணவகங்களில் தேவையான நேரங்களில் உணவு பொருள்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்கிட, தமிழக முதல்வர் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் மற்றும் ஆணையர் உத்தரவுப்படி கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் அவரது பார்வையாளர்களுக்கு தினந்தோறும் மூன்று வேளையும் உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

உணவு பொட்டலங்கள் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் உப்பிலியப்பன் கோயில் வெங்கடாசலபதி திருக்கோயில் மற்றும் சுவாமிமலை திருக்கோயிலில் இருந்து தயாரிக்கப்பட்டு மருத்துவமனை பகுதிகளிலேயே வழங்கப்படுகிறது இதனால் பொதுமக்கள் தமிழக அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மிக நன்றி தெரிவித்து உள்ளனர்,

செய்தி சசிகுமார் நிருபர்.
தஞ்சை

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.